கண்டி - பேராதனை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (16) பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரஜவத்த வீதியில் இடம்பெற்றுள்ளது.
பேராதனையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியைக் கடக்க முயன்றிருந்த பிக்கு மீது மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பிக்கு உடனடியாக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் போவலவத்த பகுதியில் உள்ள ஆசிரமமொன்றில் வசித்து வந்த 83 வயதுடைய பௌத்த துறவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதியைக் கடக்க முயன்ற பிக்குவை மோதிக்கொன்ற லொறி - பேராதனையில் சோகம் கண்டி - பேராதனை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து நேற்று (16) பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரஜவத்த வீதியில் இடம்பெற்றுள்ளது.பேராதனையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியைக் கடக்க முயன்றிருந்த பிக்கு மீது மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.விபத்தில் படுகாயமடைந்த பிக்கு உடனடியாக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உயிரிழந்தவர் போவலவத்த பகுதியில் உள்ள ஆசிரமமொன்றில் வசித்து வந்த 83 வயதுடைய பௌத்த துறவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.