இரத்தினபுரி - அயகம - சமருகம பகுதியில், தாக்குதலால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அயகம, சமருகம பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 26ஆம் திகதி மாலை, அயலவர் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயது, சந்தேகநபர் அயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அயலவவருடன் ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்தது இரத்தினபுரியில் சம்பவம் இரத்தினபுரி - அயகம - சமருகம பகுதியில், தாக்குதலால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் அயகம, சமருகம பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.கடந்த 26ஆம் திகதி மாலை, அயலவர் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயது, சந்தேகநபர் அயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.