• Apr 28 2026

Gatehouse Awards UK மற்றும் CCAS Campus இணைந்து நடத்திய 8வது ஆண்டு பட்டமளிப்பு விழா!

shanu / Apr 27th 2026, 12:43 pm
image

இங்கிலாந்தின் Ofqual ஒழுங்குமுறை அங்கீகாரம் பெற்ற சர்வதேச விருதளிப்பு அமைப்பான Gatehouse Awards UK மற்றும் Ceylon College of Applied Studies (CCAS Campus) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 8வது ஆண்டு பட்டமளிப்பு விழா, நேற்றைய தினம் (26) கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மிக விமர்சையாக நடைபெற்றது. 


Gatehouse Awards UK இன் இலங்கை நாட்டுப் பணிப்பாளரும், CCAS Campus தலைவருமான திரு. S. Najimudeen அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, CCAS Campus இயக்குநரும் பதிவாளரும், Gatehouse Awards UK – Sri Lanka நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான திருமதி Noor Nafka Illeyas அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.


இலங்கை முழுவதும் உள்ள Gatehouse Awards அங்கீகாரம் பெற்ற சாட்டிலைட் மையங்களிலிருந்து சுமார் 25 கல்வி நிறுவனங்களின் பணிப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த விழாவில், ஆங்கிலம், வணிக முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் முகாமைத்துவம், குவாண்டிட்டி சர்வேயிங், பொறியியல், கல்வியியல் மற்றும் முகாமைத்துவம் ஆகிய பல துறைகளில் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்கள் பட்டங்கள், டிப்ளோமாக்கள் மற்றும் உயர்தர டிப்ளோமாக்களைப் பெற்றுக்கொண்டனர்.


இவ்விழாவில் மலேசியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் (CMU) தலைவர் Mr. Dato Seri James Wong, இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் Mr. Khairul Iskandar Md Yusof, CCAS Campus பணிப்பாளர் திருமதி Noor Nafka Illeyas மற்றும் CCAS Campus தலைவர் திரு. S. Najimudeen ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர். 


மேலும், Gatehouse Awards அங்கீகாரம் பெற்ற இலங்கையின் தனியார் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள், கல்வி அமைச்சு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.


இந்த நிகழ்வு, Gatehouse Awards UK நிறுவனத்தின் சர்வதேச தரச்சான்று பெற்ற கல்வி வாய்ப்புகளை இலங்கையில் விரிவுபடுத்தும் பயணத்தில் ஒரு முக்கிய சாதனையாக அமைந்ததோடு, சர்வதேச தரத்திலான கல்வியை உள்ளூர் மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் தமக்கிருக்கும் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியது. 


விழாவை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து சிறப்பு விருந்தினர்கள், பட்டதாரிகள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும்  S. Najimudeen அவர்கள் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Gatehouse Awards UK மற்றும் CCAS Campus இணைந்து நடத்திய 8வது ஆண்டு பட்டமளிப்பு விழா இங்கிலாந்தின் Ofqual ஒழுங்குமுறை அங்கீகாரம் பெற்ற சர்வதேச விருதளிப்பு அமைப்பான Gatehouse Awards UK மற்றும் Ceylon College of Applied Studies (CCAS Campus) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 8வது ஆண்டு பட்டமளிப்பு விழா, நேற்றைய தினம் (26) கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மிக விமர்சையாக நடைபெற்றது. Gatehouse Awards UK இன் இலங்கை நாட்டுப் பணிப்பாளரும், CCAS Campus தலைவருமான திரு. S. Najimudeen அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, CCAS Campus இயக்குநரும் பதிவாளரும், Gatehouse Awards UK – Sri Lanka நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான திருமதி Noor Nafka Illeyas அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.இலங்கை முழுவதும் உள்ள Gatehouse Awards அங்கீகாரம் பெற்ற சாட்டிலைட் மையங்களிலிருந்து சுமார் 25 கல்வி நிறுவனங்களின் பணிப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த விழாவில், ஆங்கிலம், வணிக முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் முகாமைத்துவம், குவாண்டிட்டி சர்வேயிங், பொறியியல், கல்வியியல் மற்றும் முகாமைத்துவம் ஆகிய பல துறைகளில் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்கள் பட்டங்கள், டிப்ளோமாக்கள் மற்றும் உயர்தர டிப்ளோமாக்களைப் பெற்றுக்கொண்டனர்.இவ்விழாவில் மலேசியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் (CMU) தலைவர் Mr. Dato Seri James Wong, இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் Mr. Khairul Iskandar Md Yusof, CCAS Campus பணிப்பாளர் திருமதி Noor Nafka Illeyas மற்றும் CCAS Campus தலைவர் திரு. S. Najimudeen ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர். மேலும், Gatehouse Awards அங்கீகாரம் பெற்ற இலங்கையின் தனியார் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள், கல்வி அமைச்சு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.இந்த நிகழ்வு, Gatehouse Awards UK நிறுவனத்தின் சர்வதேச தரச்சான்று பெற்ற கல்வி வாய்ப்புகளை இலங்கையில் விரிவுபடுத்தும் பயணத்தில் ஒரு முக்கிய சாதனையாக அமைந்ததோடு, சர்வதேச தரத்திலான கல்வியை உள்ளூர் மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் தமக்கிருக்கும் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியது. விழாவை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து சிறப்பு விருந்தினர்கள், பட்டதாரிகள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும்  S. Najimudeen அவர்கள் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement