கிருஷாந்தி குமாரசுவாமியின் 30ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 583 உடல்களை நினைவுகூரும் வகையில் இலண்டனில் அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலண்டன் பிரிம்ரோஸ் ஹில் பூங்காவில் புலம்பெயர் தமிழர்களின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
1996ஆம் ஆண்டு செப்டெம்பர் 7ஆம் திகதி பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமாரசுவாமி, செம்மணிச் சந்தியில் அமைந்திருந்த இராணுவ சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டார்.
அவரது படுகொலையையும், செம்மணி புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களையும் நினைவுகூரும் வகையில் இந்த அமைதிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 60 அடி அளவில் அமைக்கப்பட்டிருந்த நினைவு அமைப்பைச் சுற்றி, 583 பேர் தமது உடல்களை முழுமையாக வெள்ளைத் துணிகளால் போர்த்திக்கொண்டு அமைதியாக தரையில் படுத்திருந்தனர்.
583 வெள்ளை விரிப்புகளுடன் இடம்பெற்ற இந்தக் காட்சியானது, செம்மணியில் புதைக்கப்பட்டிருந்த 583 உடல்களை நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது.
கிருஷாந்தி குமாரசுவாமியின் 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் தாயகத்திலும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றன.
583 வெள்ளை விரிப்புகள் கிருஷாந்தி நினைவு தினத்தில் செம்மணியை நினைவுகூர்ந்த லண்டன் தமிழர்கள் கிருஷாந்தி குமாரசுவாமியின் 30ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 583 உடல்களை நினைவுகூரும் வகையில் இலண்டனில் அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இலண்டன் பிரிம்ரோஸ் ஹில் பூங்காவில் புலம்பெயர் தமிழர்களின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.1996ஆம் ஆண்டு செப்டெம்பர் 7ஆம் திகதி பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமாரசுவாமி, செம்மணிச் சந்தியில் அமைந்திருந்த இராணுவ சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டார். அவரது படுகொலையையும், செம்மணி புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களையும் நினைவுகூரும் வகையில் இந்த அமைதிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன்போது சுமார் 60 அடி அளவில் அமைக்கப்பட்டிருந்த நினைவு அமைப்பைச் சுற்றி, 583 பேர் தமது உடல்களை முழுமையாக வெள்ளைத் துணிகளால் போர்த்திக்கொண்டு அமைதியாக தரையில் படுத்திருந்தனர்.583 வெள்ளை விரிப்புகளுடன் இடம்பெற்ற இந்தக் காட்சியானது, செம்மணியில் புதைக்கப்பட்டிருந்த 583 உடல்களை நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது.கிருஷாந்தி குமாரசுவாமியின் 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் தாயகத்திலும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றன.