• Sep 24 2026

வாகரை மாங்கேணியில் தியாக திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்

Aathira / Sep 24th 2026, 7:22 am
image

 தமிழர் தாயக பிரதேசங்களி தியாகி திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு வாகரை மாங்கேணி பிரதேசத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தியாக திலீபனின் அனுஸ்டிப்பு வார 09வது நாள் அனுஸ்டிக்கப்பட்டது.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வாகரை பிரதேச செயற்பாட்டாளர் ர.தயாகரன் அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்விற்கு தமிழ்த் தேசிய செயற்பாட்டுக் குழுமமும் இணைந்திருந்தது.

குறித்த நிகழ்வில் அருட்தந்தை, வாகரை பிரதேச சபை உறுப்பினர் சுவேந்திரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க மட்டக்களப்பு தலைவி அ.அமலநாயகி, சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உள்ளிட்ட போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அருட்தந்தை அவர்களால் திலீபனின் புகைப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், கரும்புலி மாவீரர் லெப்.கேணல் வேலு அவர்களின் தாயாரால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து வருகை தந்தோரால் மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தன.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிருவாகத்தின் கீழ் இடம்பெறும் முதல் நிகழ்வு இதுவென்பதுடன், மாங்கேணி மண்ணில் முதலாவதாக நிகழ்த்தப்பட்ட திலீபன் நினைவேந்தல் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

வாகரை மாங்கேணியில் தியாக திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்  தமிழர் தாயக பிரதேசங்களி தியாகி திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு வாகரை மாங்கேணி பிரதேசத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தியாக திலீபனின் அனுஸ்டிப்பு வார 09வது நாள் அனுஸ்டிக்கப்பட்டது.போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வாகரை பிரதேச செயற்பாட்டாளர் ர.தயாகரன் அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்விற்கு தமிழ்த் தேசிய செயற்பாட்டுக் குழுமமும் இணைந்திருந்தது.குறித்த நிகழ்வில் அருட்தந்தை, வாகரை பிரதேச சபை உறுப்பினர் சுவேந்திரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க மட்டக்களப்பு தலைவி அ.அமலநாயகி, சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உள்ளிட்ட போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது அருட்தந்தை அவர்களால் திலீபனின் புகைப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், கரும்புலி மாவீரர் லெப்.கேணல் வேலு அவர்களின் தாயாரால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.தொடர்ந்து வருகை தந்தோரால் மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தன.போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிருவாகத்தின் கீழ் இடம்பெறும் முதல் நிகழ்வு இதுவென்பதுடன், மாங்கேணி மண்ணில் முதலாவதாக நிகழ்த்தப்பட்ட திலீபன் நினைவேந்தல் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement