• May 21 2026

வௌ்ளத்தில் சிக்கிய 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு; மண்சரிவால் 120 பேர் மாயம்! 2 சடலங்கள் மீட்பு

Chithra / Nov 29th 2025, 12:46 pm
image


ராஜாங்கனை கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 


இன்று காலை (29) வேளையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இலங்கை விமானப்படை மீட்பு குழுவினர் எம்ஐ-17 ஹெலிகாப்டர் மூலம் வௌ்ளத்தில் சிக்கியிருந்தவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டதுடன் அவர்கள் அநுராதபுரம் விமானப்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


மேலும் அரநாயக்க அம்பலாங்கந்தை  பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மண்சரிவு காரணமாக சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.


இதேவேளை  வெலிமடை - கெப்பெட்டிப்பொல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக வெலிமடை - நுவரெலியா வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.


காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வௌ்ளத்தில் சிக்கிய 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு; மண்சரிவால் 120 பேர் மாயம் 2 சடலங்கள் மீட்பு ராஜாங்கனை கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இன்று காலை (29) வேளையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை விமானப்படை மீட்பு குழுவினர் எம்ஐ-17 ஹெலிகாப்டர் மூலம் வௌ்ளத்தில் சிக்கியிருந்தவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டதுடன் அவர்கள் அநுராதபுரம் விமானப்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.மேலும் அரநாயக்க அம்பலாங்கந்தை  பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மண்சரிவு காரணமாக சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.இதேவேளை  வெலிமடை - கெப்பெட்டிப்பொல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக வெலிமடை - நுவரெலியா வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement