• Aug 21 2026

3 ஆண்டுகளாக இழுபறியில் ஹம்தியின் மரண விசாரணை அறிக்கை - சபையில் முஜிபுர் ரஹ்மான் கேள்வி

Chithra / Aug 21st 2026, 2:34 pm
image


கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த ஹம்தி என்ற சிறுவனின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, மூன்று ஆண்டுகள் கடந்தும் அவரது பெற்றோருக்கு வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று (21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் சுகாதார அமைச்சரிடம் அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.


கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஹம்தி என்ற சிறுவன், 2023 ஜூலை 27ஆம் திகதி கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.


சிறுவனின் ஒரு சிறுநீரகம் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மாத்திரமே சத்திரசிகிச்சையின் போது அகற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சத்திரசிகிச்சையின் போது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சிறுவன் உயிரிழந்ததாகவும் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் முறைப்பாடு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், விசாரணை அறிக்கை இதுவரை சிறுவனின் பெற்றோருக்கு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.


மேலும், இந்த விடயம் தொடர்பாக 2024ஆம் ஆண்டு அப்போதைய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடமும், சில மாதங்களுக்கு முன்னர் தற்போதைய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடமும் தாம் கேள்வி எழுப்பியதாகவும், இது நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக முன்வைக்கப்படும் கேள்வி என்றும் அவர் தெரிவித்தார்.


சிறுவனின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை கடந்த மூன்று ஆண்டுகளாக பெற்றோர் கோரி வருகின்ற நிலையில், அந்த அறிக்கை வழங்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்றும், எப்போது அறிக்கை வழங்கப்படும் என்பதை தெரிவிக்க முடியுமா என்றும் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜயமுனி, விசாரணை அறிக்கையை கோரி பெற்றோர் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்க முடியும் எனவும், எனினும் இந்த விடயம் தொடர்பில் தற்போது உறுதியான தகவலை வழங்க முடியாது எனவும் கூறினார்.


மேலும், சம்பவம் தொடர்பில் தகவல்களைத் தேடிப் பார்த்து, பின்னர் உரிய விளக்கத்தை வழங்குவதாகவும் பிரதி சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.


3 ஆண்டுகளாக இழுபறியில் ஹம்தியின் மரண விசாரணை அறிக்கை - சபையில் முஜிபுர் ரஹ்மான் கேள்வி கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த ஹம்தி என்ற சிறுவனின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, மூன்று ஆண்டுகள் கடந்தும் அவரது பெற்றோருக்கு வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் சுகாதார அமைச்சரிடம் அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஹம்தி என்ற சிறுவன், 2023 ஜூலை 27ஆம் திகதி கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.சிறுவனின் ஒரு சிறுநீரகம் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மாத்திரமே சத்திரசிகிச்சையின் போது அகற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சத்திரசிகிச்சையின் போது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சிறுவன் உயிரிழந்ததாகவும் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் முறைப்பாடு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், விசாரணை அறிக்கை இதுவரை சிறுவனின் பெற்றோருக்கு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.மேலும், இந்த விடயம் தொடர்பாக 2024ஆம் ஆண்டு அப்போதைய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடமும், சில மாதங்களுக்கு முன்னர் தற்போதைய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடமும் தாம் கேள்வி எழுப்பியதாகவும், இது நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக முன்வைக்கப்படும் கேள்வி என்றும் அவர் தெரிவித்தார்.சிறுவனின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை கடந்த மூன்று ஆண்டுகளாக பெற்றோர் கோரி வருகின்ற நிலையில், அந்த அறிக்கை வழங்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்றும், எப்போது அறிக்கை வழங்கப்படும் என்பதை தெரிவிக்க முடியுமா என்றும் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜயமுனி, விசாரணை அறிக்கையை கோரி பெற்றோர் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்க முடியும் எனவும், எனினும் இந்த விடயம் தொடர்பில் தற்போது உறுதியான தகவலை வழங்க முடியாது எனவும் கூறினார்.மேலும், சம்பவம் தொடர்பில் தகவல்களைத் தேடிப் பார்த்து, பின்னர் உரிய விளக்கத்தை வழங்குவதாகவும் பிரதி சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement