• Aug 25 2026

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

Aathira / Aug 25th 2026, 2:57 pm
image

வவுனியாவில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா எழுச்சியுடன் நடைபெற்றது.

வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர் புரிந்த தேசிய மாவீரனுமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது  வவுனியா, மாவட்டசெயலகத்தின் முன் உள்ள பண்டாரவன்னியன் சதுக்கத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

இதன்போது பண்டாரவன்னியனின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மாவீரன் பண்டாரவன்னியன் தொடர்பான நினைவு பேருரையினை தமிழ்மணி அகளங்கனால் ஆற்றப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர, தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பல.பாலேந்திரன், அரச உயர் அதிகாரிகள், உள்ளூராட்சி சபையின் உபதவிசாளர்கள், உறுப்பினர்கள், பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா வவுனியாவில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா எழுச்சியுடன் நடைபெற்றது.வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர் புரிந்த தேசிய மாவீரனுமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.குறித்த நிகழ்வானது  வவுனியா, மாவட்டசெயலகத்தின் முன் உள்ள பண்டாரவன்னியன் சதுக்கத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.இதன்போது பண்டாரவன்னியனின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மாவீரன் பண்டாரவன்னியன் தொடர்பான நினைவு பேருரையினை தமிழ்மணி அகளங்கனால் ஆற்றப்பட்டிருந்தது.இந்நிகழ்வில் மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர, தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பல.பாலேந்திரன், அரச உயர் அதிகாரிகள், உள்ளூராட்சி சபையின் உபதவிசாளர்கள், உறுப்பினர்கள், பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement