கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 22 மாடுகளை கிளிநொச்சி பொலிஸார் மீட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் இருந்து உரிய அனுமதிப்பத்திரம் இன்றி 22 மாடுகளை பாரஊர்தி ஒன்றில் மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், முகமாலை பகுதியில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த பாரஊர்தி பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
அதன்போது, வாகனத்தில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 22 மாடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய பாரஊர்தி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் மீட்கப்பட்ட மாடுகளும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூச்சுமுட்ட கடத்தப்பட்ட 22 மாடுகள் கிளிநொச்சி பொலிஸார் அதிரடிச் சுற்றிவளைப்பு கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 22 மாடுகளை கிளிநொச்சி பொலிஸார் மீட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் இருந்து உரிய அனுமதிப்பத்திரம் இன்றி 22 மாடுகளை பாரஊர்தி ஒன்றில் மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், முகமாலை பகுதியில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த பாரஊர்தி பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.அதன்போது, வாகனத்தில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 22 மாடுகளும் மீட்கப்பட்டுள்ளன.சம்பவத்துடன் தொடர்புடைய பாரஊர்தி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் மீட்கப்பட்ட மாடுகளும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.