• May 20 2026

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு மாதம் 10,000 ரூபா! – பெண்கள், சிறுவர்கள் நலனுக்கான புதிய திட்டங்கள்

Chithra / May 19th 2026, 6:41 pm
image

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பவுல்ராஜ் தலைமையில், பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷனவின் பங்கேற்புடன் நடைபெற்ற நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலனை மையப்படுத்திய பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


சிறு பிள்ளைகளின் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதால் உருவாகும் சமூகப் பிரச்சினைகளை கட்டுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.


இதன் அடிப்படையில், வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 வயது முதல் 13 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் பதிவுசெய்யப்பட்ட பகற்பராமரிப்பு நிலையங்களில் (Daycare Centres) சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தீர்மானித்துள்ளது.


வெளிநாட்டில் பணியாற்றும் பெற்றோரின் மாதாந்த வருமானம் 400 அமெரிக்க டொலர்களைத் தாண்டும் குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்படவுள்ளது. ஆரம்ப கட்டமாக 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இறுதி ஒப்புதலின் பின்னர் மாவட்ட செயலகங்கள் ஊடாக இந்த நிதி நேரடியாக பகற்பராமரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 50 பெண் உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 2,600 பெண் பொலிஸ் காவலர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 


குறிப்பாக தமிழ் மொழியில் பேசக்கூடிய பெண் பொலிஸாரை இணைக்கும் நோக்கில் சமூக ஊடகங்கள் வாயிலாக விசேட பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.


மேலும், தமிழ் பேசும் கிராமிய மகப்பேறு உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உயர்தரம் முடித்த தமிழ்மொழி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.


சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் தகவல்களை ஒருங்கிணைத்து, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் 2026ஆம் ஆண்டுக்குள் தேசிய டிஜிட்டல் தரவு அமைப்பொன்றை உருவாக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் தாமதமடையாமல் இருக்க பிரதேச செயலகங்கள், நன்னடத்தை திணைக்களம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸார் இணைந்து ஒருங்கிணைந்த குழுவாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.


அதேநேரத்தில், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அல்லது சட்ட அமலாக்க தாமதங்கள் தொடர்பாக பொதுமக்கள் நேரடியாக தனது தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை அதிகரித்தல், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தல் மற்றும் அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் இலவச காலை உணவு வழங்குதல் உள்ளிட்ட முன்மொழிவுகளையும் உள்ளடக்க எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு மாதம் 10,000 ரூபா – பெண்கள், சிறுவர்கள் நலனுக்கான புதிய திட்டங்கள் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பவுல்ராஜ் தலைமையில், பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷனவின் பங்கேற்புடன் நடைபெற்ற நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலனை மையப்படுத்திய பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.சிறு பிள்ளைகளின் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதால் உருவாகும் சமூகப் பிரச்சினைகளை கட்டுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.இதன் அடிப்படையில், வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 வயது முதல் 13 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் பதிவுசெய்யப்பட்ட பகற்பராமரிப்பு நிலையங்களில் (Daycare Centres) சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தீர்மானித்துள்ளது.வெளிநாட்டில் பணியாற்றும் பெற்றோரின் மாதாந்த வருமானம் 400 அமெரிக்க டொலர்களைத் தாண்டும் குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்படவுள்ளது. ஆரம்ப கட்டமாக 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இறுதி ஒப்புதலின் பின்னர் மாவட்ட செயலகங்கள் ஊடாக இந்த நிதி நேரடியாக பகற்பராமரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 50 பெண் உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 2,600 பெண் பொலிஸ் காவலர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ் மொழியில் பேசக்கூடிய பெண் பொலிஸாரை இணைக்கும் நோக்கில் சமூக ஊடகங்கள் வாயிலாக விசேட பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும், தமிழ் பேசும் கிராமிய மகப்பேறு உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உயர்தரம் முடித்த தமிழ்மொழி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் தகவல்களை ஒருங்கிணைத்து, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் 2026ஆம் ஆண்டுக்குள் தேசிய டிஜிட்டல் தரவு அமைப்பொன்றை உருவாக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் தாமதமடையாமல் இருக்க பிரதேச செயலகங்கள், நன்னடத்தை திணைக்களம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸார் இணைந்து ஒருங்கிணைந்த குழுவாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.அதேநேரத்தில், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அல்லது சட்ட அமலாக்க தாமதங்கள் தொடர்பாக பொதுமக்கள் நேரடியாக தனது தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை அதிகரித்தல், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தல் மற்றும் அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் இலவச காலை உணவு வழங்குதல் உள்ளிட்ட முன்மொழிவுகளையும் உள்ளடக்க எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement