உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், இறந்துவிட்டதாகக் கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்கு செய்து தகனம் செய்யப்பட்ட பெண் ஒருவர், 27 மாதங்களுக்கு பிறகு உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவின் நவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ஷிவானி, கடந்த 2024 மே 2ஆம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதே ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஐஐஎம் சாலைக்கு பின்புறம் உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத நிலையில் அழுகிய பெண்ணின் உடல் ஒன்று மீட்கப்பட்டது.
உடலைப் பார்த்த ஷிவானியின் குடும்பத்தினர், கையில் இருந்த கயிறு மற்றும் விரலில் இருந்த மோதிரம் உள்ளிட்ட அடையாளங்களின் அடிப்படையில் அது ஷிவானிதான் என அடையாளம் காட்டினர். இதையடுத்து உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், ஷிவானியின் கணவர் மற்றும் மாமியார் வீட்டினர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், பின்னர் நடத்தப்பட்ட DNA பரிசோதனையில் அந்த உடல் ஷிவானியுடையது அல்ல என்பது தெரியவந்தது. இதையடுத்து வரதட்சணை தொடர்பான குற்றப்பிரிவுகள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டன.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ஷிவானி திடீரென தனது பெற்றோர் வீட்டிற்கு உயிருடன் திரும்பியுள்ளார். இதனால் குடும்பத்தினரும் காவல்துறையினரும் அதிர்ச்சியடைந்தனர்.
காவல்துறை விசாரணையில், ஷிவானி கடந்த காலத்தில் லக்னோவின் பரா பகுதியில் ஜாவேத் என்ற நபருடன் வசித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது விருப்பத்தின் பேரில் அங்கு தங்கியிருந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் அங்கு இருந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஷிவானி உயிருடன் இருப்பது உறுதியான நிலையில், அவரது பெயரில் தகனம் செய்யப்பட்ட அந்த அடையாளம் தெரியாத பெண் யார்? என்ற மிகப்பெரிய மர்மம் தற்போது எழுந்துள்ளது. மேலும், அந்த பெண்ணின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதையும் லக்னோ காவல்துறை மீண்டும் விசாரித்து வருகிறது.
இறந்த பெண் 27 மாதங்களுக்கு பின் உயிருடன் வீடு திரும்பிய அதிர்ச்சி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், இறந்துவிட்டதாகக் கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்கு செய்து தகனம் செய்யப்பட்ட பெண் ஒருவர், 27 மாதங்களுக்கு பிறகு உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லக்னோவின் நவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ஷிவானி, கடந்த 2024 மே 2ஆம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதே ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஐஐஎம் சாலைக்கு பின்புறம் உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத நிலையில் அழுகிய பெண்ணின் உடல் ஒன்று மீட்கப்பட்டது.உடலைப் பார்த்த ஷிவானியின் குடும்பத்தினர், கையில் இருந்த கயிறு மற்றும் விரலில் இருந்த மோதிரம் உள்ளிட்ட அடையாளங்களின் அடிப்படையில் அது ஷிவானிதான் என அடையாளம் காட்டினர். இதையடுத்து உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், ஷிவானியின் கணவர் மற்றும் மாமியார் வீட்டினர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.ஆனால், பின்னர் நடத்தப்பட்ட DNA பரிசோதனையில் அந்த உடல் ஷிவானியுடையது அல்ல என்பது தெரியவந்தது. இதையடுத்து வரதட்சணை தொடர்பான குற்றப்பிரிவுகள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டன.இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ஷிவானி திடீரென தனது பெற்றோர் வீட்டிற்கு உயிருடன் திரும்பியுள்ளார். இதனால் குடும்பத்தினரும் காவல்துறையினரும் அதிர்ச்சியடைந்தனர். காவல்துறை விசாரணையில், ஷிவானி கடந்த காலத்தில் லக்னோவின் பரா பகுதியில் ஜாவேத் என்ற நபருடன் வசித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது விருப்பத்தின் பேரில் அங்கு தங்கியிருந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் அங்கு இருந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஷிவானி உயிருடன் இருப்பது உறுதியான நிலையில், அவரது பெயரில் தகனம் செய்யப்பட்ட அந்த அடையாளம் தெரியாத பெண் யார் என்ற மிகப்பெரிய மர்மம் தற்போது எழுந்துள்ளது. மேலும், அந்த பெண்ணின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதையும் லக்னோ காவல்துறை மீண்டும் விசாரித்து வருகிறது.